பொங்கலில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


அடுத்து இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், " கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் 14 மற்றும் 15ம் தேதிகளில் மழை பெய்யும். கடற்கரை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது ‌

காரைக்கால் புதுச்சேரி பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் 16 மற்றும் 17ம் தேதிகளில் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rain for some district on Pongal


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->