காற்றில் மாறுபாடு மழை பெய்யப்போகும் பகுதிகள் வானிலை மையம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களுக்கு ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்யிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், அதிகப்பட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்  என்றும் கூறியுள்ளது.

 கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக  அரியலூரில் ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rain for eleven district


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->