இந்த 10 மாவட்டங்களுக்கு இன்று மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே மழை பெய்வது போன்று அவ்வப்போது கருமேகங்கள் சூழ்ந்து இதமான சூழல் நிலவி வரும் நிலையில். சென்னையை பொறுத்த வரை நேற்று வெயில் வறுத்தெடுத்தது. 

இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக  சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்ததாவது, வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rain for 10 district


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->