#BigBreaking : தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை.! சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு., 2 மணி நேர கடும் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சற்றுமுன் (மாலை 5.00 - 5.09.2021) பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மீனம்பாக்கம், அனகாபுத்தூர், அடையாறு, கோட்டுர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதேபோல மயிலாப்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, சேலையூர், பெருங்களத்தூர், உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும் செங்கல்பட்டு, கல்பாக்கம், மாமல்லபுரம், கூடுவாஞ்சேரி, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

சேலம், புதுக்கோட்டை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக தற்போது கன மழை பெய்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rain alert 2 hours sep 5


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->