அடுத்த 3 மணி நேரத்திற்கு உஷார் மக்களே! 11 மாவட்டங்களுக்கு வெளுத்து வாங்க போகும் மழை
People be on alert for the next 3 hours Heavy rains are expected in 11 districts
தெற்கு ஆந்திர பிரதேசம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.இதில் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

இதனால் சென்னை வானிலை ஆய்வு மையம்,'மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்' என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.
அவ்வகையில், கன்னியாகுமரி , கோயம்புத்தூர், தேனி , தூத்துக்குடிசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
People be on alert for the next 3 hours Heavy rains are expected in 11 districts