சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! - தீபாவளி பின் மழை சீற்றம்...!
Orange alert for 6 districts including Chennai Rains expected after Diwali
தமிழகத்தில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை, தற்போது தீவிரம் பெற்று தனது சக்தியை வெளிப்படுத்தி வருகிறது. அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் நேற்று முழுவதும் மழையை கொட்டி தீர்த்தது.
மேலும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கையில் தெரிவித்ததாவது," அடுத்த 10 நாட்களுக்குள் மேலும் இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒன்றாக வருகிற 24ஆம் தேதி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட தாழ்வு பகுதி, தீபாவளி பண்டிகைக்குப் பிறந்த மறுநாளே உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
இதன் தாக்கமாக, அக்டோபர் 23ஆம் தேதி சென்னை உட்பட பல பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு “ஆரஞ்சு அலர்ட்” அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வானிலை துறையின் கூற்றுப்படி, தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் வடகிழக்கு பருவமழை உச்சத்துக்கு சென்று, கடலோர மாவட்டங்களில் கடும் மழை, மின்னல், இடி தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.இந்த மழையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
English Summary
Orange alert for 6 districts including Chennai Rains expected after Diwali