5 நாட்களில் மழை புரட்டிப்போடப்போகும் பகுதி? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!! - Seithipunal
Seithipunal


தமிழகம் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. வாகன ஓட்டிகள் வெளியில் செல்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். ஒரு சில பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. 

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,


 
தென்மேற்கு வங்கக் கடல், தென் தமிழகத்தை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த  5 நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்யும்.

மேலும் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

oct 17 weather report


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->