10 மாவட்டங்களுக்கு மழை சென்னை வானிலை மையம் தகவல்! - Seithipunal
Seithipunal


மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகத்தில் சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தேனி, உதகை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்துள்ள நிலையில், இன்று 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக கனமழை பெய்தது. மேலும், தேனி மாவட்டத்தில் போடி, கம்பம் ஆகிய பகுதிகளிலும் சில நாட்களாக மழை வெளுத்து வாங்கியது. கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், நாகை, சிவகங்கை, மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில், மம்சாபுரம், வத்திராயிருப்பு ஆகிய இடங்களிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று இரவு 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. 
 
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கன பெய்ததால், இந்த மழை விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் என  மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வடவூர் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு குளிர்ந்த காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக அங்கு இதமான சூழல் நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

next 24 hours rain for 10 districts


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->