மிரட்ட வருகிறாள் "மஹா" புயல்! இந்திய வானிலை ஆய்வு மையம் அவசர எச்சரிக்கை!  - Seithipunal
Seithipunal


இன்று காலை லட்சத்தீவுகள், மாலத்தீவுகள் மற்றும் குமரி கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆனது புயலாக உருவாகியுள்ளது. 

இன்று காலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று லட்சத்தீவுகளை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று தெரிவித்தது.

மேலும் குமரி கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் தான் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு மஹா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new Cyclone near kanyakumari area named mahaa


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->