நீலகிரியின் தற்போதைய நிலவரம் என்ன? அமைச்சர் உதயகுமார் பேட்டி.!! - Seithipunal
Seithipunal


கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இது நீலகிரி மாவட்டத்தில் கடந்த 101 ஆண்டுகளுக்கு இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் இது குறித்து அமைச்சர் உதயகுமார் தனியர் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, வெள்ளம் பாதித்த கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் 55 முகாம்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர்  தங்கவைப்பு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் வெள்ள நிலமை கட்டுப்பாட்டில் உள்ளது. உதகை, கூடலூர் வட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது, அதிகம் பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதிகளில் இருந்து 15 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மழை நிற்கும் வரை பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று அமைச்சர் உதயகுமார் வேண்டுகோள் வைத்துள்ளார். பொது மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் 100% உயிரிழப்புகளை தவிர்க்க முடியும். அபாயகரமான இடங்களில் செல்ஃபி எடுக்க இளைஞர்கள் முயற்சிக்கவேண்டாம் என்று அமைச்சர் உதயகுமார் வேண்டுகோள் வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister udhayakumar press meet in nilagiri rain


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->