தமிழகத்தில் இடியுடன் மழை பெய்யப்போகும் மாவட்டங்கள் - சென்னை வானிலை ஆய்வு மையம்! - Seithipunal
Seithipunal


நீலகிரி, வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

தர்மபுரி, சேலம், நீலகிரி, கடலூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்பு. சென்னை புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் மழை பெய்யலாம். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி தேவாலாவில் 6 சென்டி மீட்டர் மழையும், அவலாஞ்சியில் 5 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

மத்திய கிழக்கு, அரபிக்கடல், லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

metrological says rain for tamilnadu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->