வளிமண்டலத்திலன் கீழடுக்கில் சுழற்சி குறிப்பிட்ட பகுதிக்கு மழை.. வானிலை மையம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்திலன் கீழடுக்கில் தற்போது ஏற்பட்டுள்ள லேசான சுழற்சியின் காரணமாக குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும் என தெரிவித்துள்ள வானிலை மையம். மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் வலுவான காற்று வீசி வருவதால் மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

metrolaogical center announced rain for some districts


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->