தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.! சென்னை வானிலை ஆய்வு மையம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வெயில் இரண்டு மாதங்களாக சுட்டெரித்து வருகிறது. அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியில் உள்ளனர்.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அனல் காற்றின் தாக்கம் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வழக்கத்துக்கு மாறாக 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் எனவும், சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may 27 weather report


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->