தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் இரண்டாவது நாட்களாக கொட்டி தீர்க்கும் மழை!! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவமழை காரணமாக பரவலாக மழைபெய்து வருகிறது. இந்தநிலையில், சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது. அசோக்நகர், கிண்டி, அடையாறு, மெரினா, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், சேத்துப்பட்டு. வியாசர்பாடி, கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல்,உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. போரூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலையிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. அதே போல் விழுப்புரம் மாவட்டம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நள்ளிரவில் கனமழை பெய்தது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இரவு முழுவதும் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

last two days rain in tamilnadu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->