புயலுக்கு முன்பே கொந்தளிக்க தொடங்கிய கடல்.! அச்சத்தில் தமிழக மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் பொதுமக்களும், மீனவர்களும் அச்சமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாகை, புதுச்சேரி உள்ளிட்ட கடலோர பகுதிகளிலும் மீனவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகின்றனர். 

இப்போது கடல் சீற்றத்தில் கடலரிப்புத் தடுப்புச் சுவர் சேதமடைந்ததால் கடல் நீர் தென்னந் தோப்புகளில் சூழ்ந்தது. இதன் காரணமாக அங்கு மக்கள் பீதியுடன் நடமாடுகின்றனர்.

இந்திய பெருங்கடல்-வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாவும், பின்னர் அது வலுப்பெற்று புயலாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 36 மணிநேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் .காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு  திசை நோக்கி நகர்ந்து அது புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புயலுக்கு ஃ பனி புயல் என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த ஃ பனி புயல் ஏப்ரல் 30ந் தேதி தமிழக பகுதியில் கரையை கடக்கும் என்றும் புயல் கரையை கடக்கும் போது 90-100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanyakumari sea fury


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->