இன்று தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழை.! ஒரே நாளில் வெள்ளக்காடாக மாறப்போகும் தமிழகம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கத்தால் கடுமையான அனல் காற்று வீசி வருகிறது. மேலும் தண்ணீர் பிரச்சினை பொது மக்களின் தீவிர தலைவலியாக மாறியுள்ளது. 

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் ஒரு சில பகுதிகளால் மட்டுமே கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

june 24 weather report


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->