தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
july 28 rain in tamilnadu
தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்-ஐ ஒட்டியிருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
july 28 rain in tamilnadu