தமிழகத்திற்கு மழைக்காலம் முடிந்ததா.? நீட்டிக்குமா..? - வானிலை ஆய்வு மையம்.!  - Seithipunal
Seithipunal


சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில், "தமிழகம் மற்றும் கர்நாடகத்தை ஒட்டி இருக்கும் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகின்றது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யகூடும்.

மேலும்,வருகின்ற 8-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது. அதன் பின்னர் மழை குறைந்துவிடும். சென்னையை பொறுத்தவரை வானமானது மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை பெய்யும், நகரின் அதிகப்பட்ச வெப்பநிலை, 87.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 75.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும்." என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

January 1 weather report


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->