கனமழையால் இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் நேற்று முன் தினம் முதல் தொடங்கிய மழை தற்போது வரை பரவலாக மழை பெய்து வருகிறது. பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், மலுமிச்சம்பட்டி,  தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், தடாகம் ,  துடியலூர் ஆகிய பகுதிகள் மற்றும் கோவை மாநகர பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையால் மலை சார்ந்த பகுதிகள் இயற்கை எழிலோடு ரம்மியமாக காட்சி தருகின்றன. கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் வர துவங்கியுள்ளது இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இதேபோல் நீலகிரி மாவட்டம் பந்தலூர் , கூடலூர் மற்றும் குந்தா ஆகிய மூன்று தாலுகாக்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக இரும்பு பாலம் என்ற இடத்தித்துள்ள மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழை எதிரொலி நீலகிரி மாவட்டம் பந்தலூர் , கூடலூர்,ஊட்டி மற்றும் குந்தா மூன்று தாலுகாக்களில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் இன்று விடுமுறை அறிவித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்த தாலுகாவில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

holiday for nelagiri districts schools


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->