கொட்டி தீர்க்கும் கனமழை., கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!! - Seithipunal
Seithipunal


கோவை மற்றும் நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் நேற்று மிக கனமழை பெய்துள்ளது. நீலகிரியின் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 82 செண்டி மீ ட்டர் அளவுக்கு கன மழை கொட்டி உள்ளது. மேல் பவானியில் 30 செண்டி மீட்டரும், கூடலூரில் 24 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் பெய்து வரும் கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நொய்யல் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை.

தென் மேற்கு பருவமழையின் தீவிரம், மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கர்நாடகா மற்றும் கேரளாவுக்கு, அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டு சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான, தெற்கு உள் கர்நாடகா மற்றும் வடக்கு கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை  தொடரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

heavy rain kovai district


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->