தமிழகத்தில் திடீரென வெளுத்து வாங்கும் மழை.. குதூகலத்தில் மக்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுவையில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம் மற்றும் புதுவையில்  இன்று ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இன்று காலை முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சாலையோரங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது மழை பெய்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

feb 22 weather report


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->