தமிழகத்தில் இன்றும் மழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுவையில் கிழக்கு திசை காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

 மேலும் விவசாய நிலங்களிலும் தண்ணீர் தேங்கியதால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை பெய்வது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு பக்கம் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தவர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இதனால் மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dec 03 weather report


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->