அடுத்து இந்த மாவட்டங்கள் தானாம், மக்களே உஷார்!! வெளியான முக்கிய அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் பலத்த மழை கனமழை பெய்துவருகிறது. அவற்றில் குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மழை பெய்து பெருதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தை பொறுத்தவரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை உட்பட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மோகமூட்டத்துடன் இருக்கும். மாலை அல்லது இரவு நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

august 21 weather report


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->