தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா முதல் உள் தமிழ் வரை 1.5 கிலோ மீட்டர் வரை உயரமும் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 2.1 கிலோ மீட்டர் வேகத்திலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வடக்கு மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

18.4.2021 முதல் 19.4.2021 வரை : மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 

20.4.2021 முதல் 21.4.2021 : மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ்மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

apr 17 weather report in tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->