சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி மேல் மகிழ்ச்சி தந்த சென்னை வானிலை ஆய்வு மையம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பல இடங்களில் அனல் காற்று வீசியதால் மக்கள் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். மேலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் சென்னைவாசிகள் மழை  எதிர்நோக்கி காத்திருந்தனர்.

வெப்ப சலனம் காரணமாக நேற்று சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. சென்னையில் 4 மாதங்களுக்கு பிறகு மழை பெய்தது. குறிப்பாக பூந்தமல்லி, ஐயப்பன்தாங்கல், போரூர், ஆவடி, மதுரவாயல் ஆகிய இடங்களில் மழை பெய்தது. இதனால் சென்னை வாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

தற்போது சென்னையில் சிறிய ஊட்டி போல் மாறி உள்ளது. இன்று காலை முதல்  குளுகுளுவென வானிலை நிலை வருகிறது. 

இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வடக்கு வங்காள விரிகுடா கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வடக்கு திசையை நோக்கி நகர்ந்து, பின்னர் வட மேற்கு திசையில் நகரம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன் காரணமாக கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் நீலகிரி ஆகிய மாதங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்ப சலனம் காரணமாக  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 day rain in chennai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->