மொரட்டு சிங்கிள்களுக்கு ஒரு விருந்து.! ட்ரெயிலரே இப்படின்னா, படம் எப்படி இருக்கும்.?!   - Seithipunal
Seithipunal


வேல்ஸ் பட நிறுவனம் ஆர்.ஜே.பாலாஜி நடித்து வெளியான எல்.கே.ஜி மற்றும் ஜெயம் ரவி நடித்து வெளியான கோமாளி உள்ளிட்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து ஒரு அட்டகாசமான படத்தை தயாரித்துள்ளது. அந்த படத்தின் பெயர் தான் பப்பி.

இந்த பப்பி படத்தில் வருண் கதா நாயகனாக நடித்துள்ளார். கோமாளி புகழ் சம்யுக்தா ஹெக்டே இதில் ஹீரோயினாக நடித்து இருக்கின்றார். இந்த படத்தில் யோகிபாபு காமெடி வேடத்தில் நடித்து இருக்கின்றார். 

நேற்று இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதில், இன்றைய இளைஞர்களை கவரும் விதத்தில், முழுக்க முழுக்க இருட்டு அறையில் முரட்டு குத்து, ஆதலால் காதல் செய்வீர், பியார் பிரேமா காதல் போன்ற படங்களின் காட்சிகளை ஒருங்கே பார்த்தது போல ட்ரெய்லர் அமைந்துள்ளது. 

இந்த படத்தின் போஸ்டரில் பாலியல் பட நடிகரின் புகைப்படம் அருகில் நித்தியானந்தா புகைப்படம் இருக்குமாறு அமைக்கப்பட்டு இருந்தது சர்ச்சையை கிளப்பியது. இதன் காரணமாக இந்த படத்திற்கு எதிர்ப்பு தோன்றியது. ஆனாலும், ட்ரெய்லரில் அதையும் கலாய்த்து காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 

படத்தின் ட்ரெயிலர்: 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puppy trailer release


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->