48 MP கேமரா, 4000 mAh பேட்டரி கொண்ட மொபைல் வெறும் ரூ.10,000 ! மிரட்டலாக வருகிறது ரெட்மீ நோட் 7! - Seithipunal
Seithipunal


இந்திய ஸ்மார்போன் சந்தையில் சியோமி நிறுவனம் தான் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், 48 MP கேமரா- 4000 mAh பேட்டரி கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போனை சியோமி நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.

சீன நிறுவனமான சியோமியின் கீழ் தயாராகும் முதல் ரெட்மீ ஸ்மார்ட்போன் ரெட்மீ நோட் 7 ஆகும். இந்த போன் அண்மையில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என தகவல் வந்துள்ளது.

இந்த போனின் சிறப்பு அம்சங்கள் பற்றி தற்போது பார்க்கலாம். 

விலை : சீனாவில் வெளியிடப்பட்ட இந்த போனை இந்திய விலையில் ஒப்பிடும் போது ரெட்மீ நோட் 7 -னின் விலை (  3 ஜிபி ரேம் 32 ஜிபி மெமரி)  ரூ.10,500 க்குள் இருக்கும். 

இந்த போன்ற 3 வேரியண்ட்டில் வெளியாகிறது. 

3 ஜிபி ரேம் 32 ஜிபி மெமரி : ரூ.10 ,500 (தோரயமாக)
4 ஜிபி ரேம் 64 ஜிபி மெமரி : ரூ.12,500  (தோரயமாக)
6 ஜிபி ரேம் 64 ஜிபி மெமரி : ரூ.14,500  (தோரயமாக)
 
சீனாவில் வருகிற 15 தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. 

நிறங்கள் : ட்வைலைட் கோல்டு, ஃவான்டசி கோல்டு, பிரையிட் பிளாக்  உள்ளிட்ட 3 நிறங்களில் வெளியாகும்.

மென்பொருள் :  அண்ட்ராய்டு ஓரியோ 

டிஸ்பிளே :  6.3 இஞ்ச் கொண்ட டிஸ்பிளேவையும் கொண்டிருக்கும்.

பிரசாசர் : Qualcomm Snapdragon 660 MSM8956  
 
கேமரா : பின்புறமாக  48 மெகா பிக்சல் + 5 மெகா பிக்சல் கேமரா; முன்புறமாக 13  மெகா பிக்சல் கொண்ட கேமரா. 

பேட்டரி : 4,000mAh பேட்டரி.  இதனால் சுமார் 7 மணி நேரம் வரை கேமிங்கிற்கு பயன்படுத்த முடியும். மேலும் வேகமாக சார்ஜை ஏற்றிக்கொள்ளும் வசதி இருப்பதால் இந்த ஸ்மார்ட் போனுக்கு அதிகபடியான வரவேற்பு கிடைத்துள்ளது.

கூடிய விரைவில் இந்தியாவில் இந்த போன் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Xiaomi Redmi Note 7 Pro with 48MP Sony IMX586 camera to launch soon: Specs, features 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->