பெற்றோர்களே உடனே உங்கள் பிள்ளைங்களின் செல்போனை சோதனை செய்யுங்கள்.! ஆபாச கதை சொல்லும் பிரபல செயலி.! - Seithipunal
Seithipunal


வளர்ந்து வரும் நவீன இந்த உலகில் டெக்னாலஜி என்பது அதி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. 2000 ஆண்டுக்குப் பிறகான நவீன தொழில்நுட்ப வளர்ச்சி என்பது, சொல்லவே முடியாத அளவுக்கு அதிகமாக வளர்ந்து உள்ளது. 

2000 ஆண்டு கால தொடக்கத்தில் நாம் எப்படி இருந்தோம் என்று பின்னோக்கி பார்த்துவிட்டு, தற்போது நாம் எப்படி இருக்கிறோம் என்று பார்த்தாலே தலை சுற்றுகிற அளவுக்கு உள்ளது.

கையடக்க செல்போன் மூலமாக நம் இந்த உலகத்தையே சுற்றி வந்துவிடலாம். எத்தனை முறை சுற்றி வந்தாலும், அத்தனை நல்ல விஷயங்களை நாம் கற்றுக்கொள்ள, இந்த கையடக்க செல்போன் நமக்கு உதவி செய்து கொண்டிருக்கிறது. 

அதே சமயத்தில் வளரும் இளம் பருவத்தினரை தவறான பாதைக்கு இழுத்துச் செல்லக்கூடிய அனைத்து வழிகளும் எளிதாக, மிக மிக எளிதாக இந்த செல்போன் மூலம், இணையதளத்தின் மூலம் அவர்களுக்கு இருக்கின்றது.

இந்த நிலையில், நாம் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய பாடல் கேட்க கூடிய பிரபல செயலி ஒன்றில், ஆபாச கதைகள் அடங்கிய ஆடியோ தொகுப்புகள் இடம் பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உலகில் உள்ள பல மொழிகளில் உள்ள பாடல்கள் அனைத்தும் கேட்கக்கூடிய, ஒரு பிரபல செயலியான 'ஸ்பாட்டிஃபை' (spotify) என்ற செயலில் தான் இந்த தமிழ் ஆபாச கதைகள் ஆடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

பொதுவாக இந்தியாவில் ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும், இதுபோன்ற ஆபாச கதைகள் மற்றும் செயலிகள் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் பலரும் பயன்படுத்தக்கூடிய, முக்கியமாக கல்லூரி மாணவர்கள் அதிகம் உபயோகப்படுத்தக்கூடிய ஒரு பாடல் கேட்கும் செயலியில், இதுபோன்ற ஒரு ஆபாச கதைகள் கொண்ட ஆடியோக்கள் தொகுப்பு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

worst mobile app in your mobile


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->