வெளியே வரும் கேஸ் மட்டும் ஏன் எரிகிறது? சிலிண்டரின் உள்ளே இருக்கும் கேஸ் ஏன் பற்றிக் கொள்வதில்லை? - Seithipunal
Seithipunal


கேஸ் (Gas) சிலிண்டரின் திறப்பை திறந்து பற்ற வைத்த உடனே அடுப்பு நம்முடைய உபயோகத்துக்கு தயாராகி விடுகின்றது. 

நம்முடைய சமையலுக்கு பயன்படுத்த கேஸ் என்-பியூட்டேன் (N-Butane) எனும் எரிபொருள் தான் பயன்படுகிறது. எந்தவொரு எரிபொருளாக இருந்தாலும், அது எரிய வேண்டும் என்றால் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை.

ஒன்று அந்த எரிபொருளானது தான் பற்றிக்கொள்கின்ற அளவிலான வெப்பநிலையை அடைய வேண்டும்.

இரண்டாவது எரிவதற்குத் தேவையான அளவில் பிராண வாயு, ஆக்சிஜன் கிடைக்க வேண்டும்.

கேஸ் சிலிண்டர்கள் ஏன் வெடிக்குது உங்களுக்கு தெரியுமா? - Seithipunal

நம்முடைய கேஸ் அடுப்பில் என்ன நிகழ்கிறது? சமையல் வாயுவானது பற்றிக் கொள்ள தேவையான வெப்பநிலை 360 ̊C. சிலிண்டர் வால்வைத் திறக்கும் பொழுது கேஸ் வெளியேறி அடுப்பின் பர்னர் பகுதியை வந்தடைந்தவுடன் அதற்கு தேவையான வெப்பம் கிடைக்கிறது. 

அத்துடன் அங்கே தேவையான அளவு ஆக்சிஜன் கிடைப்பதால் தொடர்ந்து எரிகின்றது.

ஆனால், சிலிண்டருக்கு உள்ளே வெப்பம், ரப்பர் டியூப் தாண்டி சிலிண்டரின் வாய் பகுதியை அடைந்து உள்ளே சென்று பரவ வேண்டும். ஆனால் இது இது முற்றிலும் சாத்தியமில்லை. 

சிலிண்டரின் உள்ளே அடைக்கப்பட்டுள்ள கேஸ் மிக மிக உயர் அழுத்தத்துடன் உள்ளே அடைக்கப்பட்டு இருக்கின்றது. ஆகவே, சிலிண்டரின் உள்ளே இருக்கும் அழுத்தம் வெளியிலுள்ள சுற்றுப்புற அழுத்தத்தை விட பல மடங்கு அதிகம். 

இந்த 2 காரணங்களால் சிலிண்டரின் உள்ளே இருக்கின்ற எரிபொருள் பற்றி எரிய வாய்ப்பில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why inside of cylinder could not fired


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->