வாட்ஸ் ஆப்பில் வரப்போகும் புதிய வசதி! - Seithipunal
Seithipunal


உலகின் பல மில்லியன் வடிக்கையாளர்களால் உடனடி குறுஞ்செய்திப் பரிமாற்ற சேவையான வாட்ஸ் ஆப், வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து கொண்டு அவர்களுக்கு தேவையானதை பூர்த்தி செய்யும் வகையில் அவ்வப்போது, புதிய மேம்பாடுகளை வாட்ஸ் ஆப் செயலியில் வழங்கி வருகிறது. 

அந்தவகையில், ஏற்கெனவே நாம் அனுப்பிய செய்தியை நீக்கும் வசதியும், அதற்கான உச்சபட்ச கால அவகாசத்தையும் வாட்ஸ் ஆப் வழங்கியது.

இந்நிலையில், ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் நம்மால் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி எத்தனை நேரத்துக்கு திரையில் தோன்ற வேண்டும் என்பதையும் குறுஞ்செய்தியை அனுப்பிய நாமே  தீர்மானிக்கும் வகையில் புதிய வசதி வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, குறுந்தகவல் அனுப்பிய 5 விநாடிகள் அல்லது ஒரு மணி நேரம் வரை அந்த குழுவில் தோன்ற வேண்டும் என முன்கூட்டியே செட்டிங் செய்து குறுந்தகவல் அனுப்பும் நபரே தீர்மானித்துக் கொள்ளலாம் என சொல்லப்படுகிறது. மேலும் அந்த செய்தி நீக்கப்பட்டுவிட்டது என்ற தகவல் கூட குழுவில் இடம்பெறாத  வகையில் புதிய மேம்பாடுகளை வாட்ஸ் ஆப் செயலியில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whattsapp update as soon


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->