வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தும் அசத்தல் அப்டேட்!  - Seithipunal
Seithipunal



புதிய வசதிகளை பயனர்களின் பயன்பாட்டிற்காக வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப் செயலிக்கு உலகம் முழுவதும் பயனர்கள் உள்ளனர். இந்நிறுவனம் மெட்டா (பேஸ்புக்) நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது.

மெட்டாவின் கீழ் வந்தது முதல் வாட்ஸ்ஆப் செயலியில் அதிக அப்டேட்-கள் அவ்வப்போது அறிமுகப்படுத்துவது வழக்கமாகியுள்ளது. பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதியபுதிய வசதிகளை அந்நிறுவனம் கொண்டுவந்துள்ளத்தகு.

அந்த வகையில் அண்மையில் பயனர்கள் 'தனக்கு தானே செய்தி அனுப்பிக் கொள்ளும் முறை'யை வாட்சப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில், இதன் ஒரு படியாக கணினி பயன்பாட்டிற்கும் 'தனக்கு தானே செய்தி அனுப்பிக் கொள்ளும் முறை'யை விரிவுபடுத்த உள்ளதாக வாட்சப் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தற்போது இதற்கான சோதனை முயற்சிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள வாட்ஸ் அப் நிறுவனம், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. 

மேலும், புதிய பல வசதிகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wHATSAPP NEW UPDATE 122022


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->