இதைமட்டும் உங்கள் வாட்ஸாப்பில் செய்துவிடாதீர்கள்!. வங்கியில் உள்ள மொத்த பணமும் போய்டும் ! - Seithipunal
Seithipunal


தற்போது வங்கி வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலே, அவர்களது பணங்களை கொள்ளை அடிக்கும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது. வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்களுக்கு வாட்ஸாப் மூலம் தேவையில்லாத மெசேஜ்களை அனுப்பி OTP போன்றவற்றை எளிதில் பெற்று, வங்கி கணக்கிலிருந்து பணம் திருடும் நாச வேலையில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

வாட்ஸாப் மூலம் மெசேஜ்களை அனுப்பி, நீங்கள் அதனை கிளிக் செய்தால்  அது கிடைக்கும் என ஆசையை தூண்டி உங்களுக்கு தெரியாமலேயே மொபைலில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்துவிடுவர். பின்னர் அந்த செயலியின் மூலம் உங்களுக்கு வரும் OTP யை அவர்கள் எடுத்து கொள்ளை அடிக்க நேரிடும்.

மேலும், உங்களுக்கு போன் செய்து வங்கி அலுவலர் போலவே பேசி உங்கள் கிரெடிட்/டெபிட் கார்டானது காலாவதி ஆகிவிட்டதாக கூறி, அதனைப் புதுப்பிக்க, உங்கள் கார்டு எண், CVV  எண் போன்றவற்றை கேட்டுப் பெற்றுவிடுவர். பின்னர் உங்களுக்கு மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்ணையும் கேட்டுப் பெற்றுவிடுவர். இதனையடுத்து உங்கள் பணம் கொள்ளையடிக்கப்படும்.

எனவே இதைப்போன்ற அழைப்புகளைப் பெற்றால், உங்கள் வங்கி தொடர்பான எந்த தகவலையும் அவர்களிடம் தெரிவிக்க வேண்டாமென SBI வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதுபோன்று உங்கள் வங்கி கணக்கானது கொள்ளையடிக்கப்பட்டால், 1-800-111109 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் அல்லது 'problem' என டைப் செய்து 9212500888 என்ற எண்ணிற்கு SMS அனுப்பலாம் என SBI வங்கி தெரிவித்துள்ளது. 

English Summary

whatsApp awarness


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal