வாட்ஸ் அப் வாய்ஸ் கால் வசதியில் புதிய அப்டேட்..!! - Seithipunal
Seithipunal


வாட்ஸ் அப் புதிய அப்டேட் :

வாட்ஸ் அப் தனது பயன்பாட்டினை (Whats App Updated) அப்டேட் செய்துள்ளது. பல‌ புது அம்சங்களைக் கொண்டு பயனாளர்களின் மனதிலும், புது பயனர்களை செய்கின்ற‌ வாட்ஸ்அப், அடிக்கடி அப்டேட் செய்துவருவது வழக்கம்.

முதலில் சாட்டிங் ஆப்ஷனை மட்டும் கொண்டிருந்த வாட்ஸ்அப், பிறகு வாய்ஸ் காலிங், வீடியோ காலிங் என பல வசதிகளை வழங்கியது.

அதன்படி வாட்ஸ்அப் செயலியில் உள்ள வாய்ஸ் கால் அம்சத்திற்கு புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கால் வெயிட்டிங் :

இப்போது ஒருவருடன் சாதாரண அழைப்பிலோ அல்லது வாட்ஸ்அப் அழைப்பிலோ பேசிக்கொண்டு இருக்கும்பொழுது மற்றொரு வாட்ஸ்அப் அழைப்பு கொடுக்க முடியாது. அந்த அழைப்பு தானாகவே நிராகரிக்கப்பட்டுவிடும்.

ஆனால் தற்போது வேறு அழைப்பில் இருக்கும்போது வாட்ஸ்அப் அழைப்பில் புதிதாக இனி கால் வெயிட்டிங் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.

எதை தொடர வேண்டும்?

மேலும் இப்போது வழங்கப்பட்டுள்ள இந்த அம்சத்தின் மூலம் பேசிக்கொண்டிருக்கும் அழைப்பு அல்லது வரும் புதிய அழைப்பில் எதை தொடர வேண்டும் என்பதை பயனாளரே முடிவு செய்துகொள்ளலாம்.

இந்த புதிய சேவையை உங்கள் வாட்ஸ்அப்பில் ஆக்டிவேட் செய்ய முதலில், உங்கள் வாட்ஸ்அப் செயலி சமீபத்திய அப்டேட்டை பெற்றிருக்க வேண்டும். உங்கள் வாட்ஸ்அப் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

விரல்நுனி லாக் அப்டேட் : 

பின்பு இதைத் தொடர்ந்து விரல்நுனி லாக் அப்டேட் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் அப்டேட் ஆகி உள்ளது.

Settings > Account > Privacy > Fingerprint lock என்ற வழிகளில் பயனாளர்கள் இந்த ஆப்ஷனை பெற முடியும்.

டார்க் மோட் :

மேலும் வாட்ஸ்அப் பயனர்கள் நீண்டநாள் மிகவும் எதிர்பார்த்த டார்க் மோட் (Dark mode) அப்டேட் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில் பீட்டாவெர்ஷனில் இந்த டார்க் மோட் வசதி கிடைக்க துவங்கியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Whats App update for voice call


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->