வாட்ஸ் அப் புதிய அப்டேட்.. நாம் கேட்ட பின்னர் அனுப்பும் வசதி.!! - Seithipunal
Seithipunal


உலகிலுள்ள வாட்ஸ் அப் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எளிதாக மெசேஜிங் சர்வீஸாக இருக்கும் வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் நோட்ஸ் எனப்படும் குரல் செய்தி அம்சமானது. பிற பயனாளர்கள் மற்றும் குழுவிலுள்ள பயனாளிகளுடன் மிக எளிதாக தொடர்பு கொள்ள உதவுகிறது. 

அனைத்து வாட்ஸ் ஆப் பயனாளிகளுக்கும் இது எல்லா நேரங்களிலும் பயன்படுத்த முடியாவிட்டாலும், வேலைகளில் பிஸியாக இருக்கும் நேரங்களில், டைப் செய்து மெசேஜ் அனுப்ப முடியாத போதும், நெரிசலான பயணங்களின் போது, விரைவாக தகவலை பெற வேண்டியிருக்கும் போது வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 

இந்நிலையில், இந்த வாய்ஸ் மெசேஜில் வாட்ஸ் அப் நிறுவனம் புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. அதாவது குரல் பதிவு அனுப்பும் முன்பு நாம் கேட்டுக் கொள்ளும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு என இரு தளங்களிலும் இந்த வசதி செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whats app new update for voice messages


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->