வாட்ஸ் ஆப் குரூப்பில் புதிய வசதி.! அட்மின்களுக்கு அசத்தலான செய்தி..! - Seithipunal
Seithipunal


வாட்ஸ் ஆப் குழுவில் அனுப்பிய செய்தி சில நொடிகளில் தாமாகவே அழித்து கொள்ள கூடிய வசதி சோதனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உலகின் பலரும் பயன்படுத்தும் உடனடி குறுஞ்செய்திப் பரிமாற்ற சேவையான வாட்ஸ் ஆப், வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து அவ்வப்போது, புதிய மேம்பாடுகளை வழங்கி வருகிறது. ஏற்கெனவே அனுப்பிய செய்தியை நீக்கும் வசதியும், அதற்கான உச்சபட்ச கால அவகாசத்தையும் வாட்ஸ் ஆப் வழங்கியது.

இந்த நிலையில், ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி எவ்வளவு நேரத்துக்கு திரையில் இருக்க வேண்டும் என்பதையும் அனுப்பியவரே தீர்மானிக்கும் வகையில் புதிய வசதி சோதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

அதில் அனுப்பிய 5 விநாடிகள் அல்லது ஒரு மணி நேரம் வரை அந்த குழுவில் தோன்ற வேண்டும் என்று முன்கூட்டியே செட்டிங் செய்து அனுப்பும் நபர் தீர்மானித்துக் கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. அந்த செய்தி நீக்கப்பட்டுவிட்டது என்ற தகவல் கூட குழுவில் இடம்பெறாது எனும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த வசதி வர இருக்கிறது என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whats app new update


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->