இந்த தேதி முதல் வாட்ஸ்ஆப் இயங்காது, அதிர்ச்சியளித்த வாட்ஸ்ஆப் நிறுவனம்.! - Seithipunal
Seithipunal


வரும் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கோடிக்கணக்கான மொபைல் போன்களில் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியாது என அறிவித்து வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

iOS8 அல்லது அதற்கு முந்தைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் போன்கள் மற்றும் 2.3.7 அல்லது அதை விட பழைமையான ஆன்டிராய்டு மென்பொருளில் இயங்கி வரும் அனைத்து போன்களிலும் வரும் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாட்ஸ்ஆப் கிடைக்காது. 

அதே போன்று வின்டோஸ் போன்களில் வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பிறகு வாட்ஸ் ஆப்பை பயன்படுத்த முடியாது என வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் உரிமையாளரான ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

iOS8,  2.3.7 அதைவிட பழைமையான ஆன்டிராய்டு மென்பொருளில் இயங்கம் போன்கள், வின்டோஸ் போன்கள், இந்த வகை போன்களை வைத்துள்ள  பயனர்களால் புதிய வாட்ஸ்ஆப் கணக்குகளை துவக்கவோ, பழைய கணக்குகளை புதுப்பிக்கவோ முடியாத வகையில் ஏற்கனவே தொழில்நுட்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 

இதனிடையே அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவின் உள்ளிட்ட பல நாடுகளில் வாட்ஸ்ஆப் செயலி முடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whatapp not worked in this month onwards


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->