விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது புகைப்படங்களை வெளியிட்டது நாசா.! - Seithipunal
Seithipunal


நிலவின் தென் துருவத்தை ஆராயவதற்காக சந்திரயான் 2 விண்கலம் மூலமாக விக்ரம் லேண்டர் அனுப்பப்பட்டது. 

இதையடுத்து, விக்ரம் லேண்டர் நிலவில் தரையிரங்க 2 கிலோ மீட்டர் தூரமே இருந்த நிலையில், விக்ரம் லேண்டர் ஆர்பிட் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் பலமுறை முயற்சித்தும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதனிடையே, விக்ரம் லேண்டரை  இருப்பிடத்தை கண்டறிய இஸ்ரோ அமெரிக்கா விண்வெளி ஆராட்சி நிறுவனமான  நாசாவிடம் உதவி கோரியது. விக்ரம் லேண்டர் விழுந்த பகுதியை நாசாவின் லூனார் புலனாய்வு ஆர்பிட்டர் புகைப்படங்கள் எடுத்து அனுப்பியுள்ளது. ஆனால் இந்தப் புகைப்படங்களிலும் விக்ரம்  லேண்டரை கண்டறிய முடியவில்லை என கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் நாசா தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது விழுந்து நொறுங்கிய இடத்தில் காணப்பட்ட சிதறல்களை எஸ் என்ற குறியீட்டுடன் சண்முக சுப்பிரமணியன் என்பவர் கண்டறிந்ததாகக் சொல்லப்படுகிறது.

விக்ரம் லேண்டர் விழுந்த இடத்திலிருந்து வடமேற்கு திசையில் சுமார் 750 மீட்டர் தூரம் வரை விக்ரம் லேண்டரின் சிதறல்கள் விழுந்து கிடப்பதையும் சண்முக சுப்பிரமணியன் கண்டறிந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 

இதையடுத்து விக்ரம் லேண்டரின் சிதறல்களை புகைப்படம் எடுத்துள்ள நாசா அதனை தற்போது வெளியிட்டுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vikram lander parts photos released by nasa


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->