இன்று விண்ணில் சீறிப் பாயப் போகும் பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) பூமி கண்காணிப்பு பணிக்காக 1,410 கிலோ எடை கொண்ட சி எம் எஸ் 01 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது. 

கல்வி, மருத்துவம், பேரிடர் மேலாண்மை ஆகிய பணிகளுக்கு தேவையான தரவுகளை பெறுவதற்காக இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டது. இதில் முதல் நிலையில் திட எரிபொருளும், இரண்டாம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டுள்ளது. 

இது இந்தியாவின் 52வது பிஎஸ்எல்வி ராக்கெட் ஆகும். இதற்கான இறுதிகட்ட பணிகள் நிறைவு பெற்று, 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பகல் 2.41 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கை கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 25 மணி நேர கவுண்ட்டவுன் முடிந்த பிறகு திட்டமிட்டபடி இன்று மாலை 3.41 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today pslv c50 rocket launched


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->