ஆன்லைனில் பண பரிமாற்றம் செய்ய சிறந்த வழி எது?  தெரிந்து கொள்ளுங்கள்.!  - Seithipunal
Seithipunal


NEFT, IMPS, RTGS, UPI என்றால் என்ன?

இன்றைய காலக்கட்டத்தில் இணையதள வங்கி சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முன்பெல்லாம் ஒரு வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்றால் அந்த வங்கி கிளைகளுக்கே சென்று செலுத்த வேண்டிய சூழல் இருந்தது.

ஆனால் இன்று வளர்ந்து வரும் இணையதள உலகில் ஸ்மார்ட்ஃபோன் போன்றவற்றின் வளர்ச்சியால் வீட்டில் அமர்ந்த படியே இணையதள வங்கிகள் மூலமாகவும், வங்கிகளின் செயலிகள் மூலமாகவும் பணப்பரிவர்த்தனை செய்து வருகிறோம்.

NEFT, IMPS, RTGS, UPI போன்றவை இணையதள வங்கி சேவை மூலம் பணம் பரிமாற்றம் செய்வதற்கான வழிமுறைகள் ஆகும்.

எனவே நாம் இன்றைய பதிவில் NEFT, IMPS, RTGS, UPI என்றால் என்ன? இவற்றுக்கான வித்தியாசங்கள், கட்டணங்கள், பணப்பரிவர்த்தனை நேரங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

NEFT:

NEFT என்றால் தேசிய மின்னணு பணப்பரிவர்த்தனை ஆகும்.

இதன் விரிவாக்கம் National Electronic Fund Transfer.

இதில் 1 ரூபாய் முதல் 10 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை செய்யலாம்.

NEFT மூலமாக பணம் அனுப்பினால் பணப்பரிவர்த்தனை முழுமை பெற குறைந்தது 30 நிமிடம் முதல் 1 மணி நேரமாவது ஆகும். இதில் பணப்பரிவர்த்தனை வங்கிக்கு வங்கி மாறுபடும்.

IMPS:

IMPS உடனடி கொடுப்பனவு சேவை ஆகும். 

இதன் விரிவாக்கம் Immediate payment service.

உடனடி கொடுப்பனவு சேவை மூலமாக 24 மணிநேரமும் நீங்கள் பணப்பரிவர்த்தனை செய்யலாம். இந்த முறை மூலமாக 1 ரூபாய் முதல் 2 லட்சம் வரை நீங்கள் பணப்பரிவர்த்தனை செய்யலாம்.

IMPS சேவையில் பணம் அனுப்பினால் சில நிமிடங்களில் பணப்பரிவர்த்தனை முழுமை பெறும். இதற்கான பணப்பரிவர்த்தனை கட்டணங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடும்.

RTGS:

RTGS என்றால் நடப்பு நேர மொத்த தீர்வு ஆகும். 

இதன் விரிவாக்கம் Real Time Gross Settlement.

RTGS வாயிலாக 2 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பணப்பரிவர்த்தனை செய்யலாம்.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். இதற்கான பணப்பரிவர்த்தனை கட்டணங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடும்.

UPI: 

மொபைல் செயலி மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் முறையே UPI ஆகும்.

இதன் விரிவாக்கம் Unified payment Interface. 

ஒரு நாளைக்கும் 1 லட்சம் ரூபாய் வரையில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்.

UPI மூலமாக 24 மணி நேரமும் பணப்பரிவர்த்தனை செய்யலாம். இதற்கு வங்கிக்கணக்கு, IFSC குறியீடு போன்றவையும் தேவையில்லை. 

குறிப்பு : 

இந்த சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போது உங்கள் வங்கி கணக்கில் இணையதள வங்கி சேவை இருக்க வேண்டியது கட்டாயம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

there is so many way for online transaction


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->