சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறது.! இஸ்ரோ தலைவர் சிவன் உறுதி.!! - Seithipunal
Seithipunal


சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது இன்று இறுதிகட்ட பணிகள் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நிலவில் இறங்கி ஆய்வு நடத்தும் சந்திராயன் விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான முதல் முயற்சியில் கடந்த 15 ஆம் தேதி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது பட்டது.

விண்கலத்தில் உள்ள கிரையோஜெனிக் எந்திரத்தின் ஹீலியம்  வால்வில் ஏற்பட்ட விரிசலால் கசிவு ஏற்பட்டது .கசிவு ஏற்பட்ட இந்த இடத்தை கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர் அதனை அடைக்கும் பணி மூன்று நாட்களாக நடைபெற்றது இதையடுத்து இன்று மதியம் 2.43 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு உள்ளது அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாகவும் இனி கோளாறு ஏற்பட சாத்தியம் இல்லை எனவும் தெரிவித்தார் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும் எனவும் உறுதியாக தெரிவித்தார்.

தொடர்ந்து 48 நாட்கள் பயணிக்கும் சந்திரயான்-2 விண்கலம் நிலவை சென்றடைந்த பின்னர் அதிலிருந்து நிலவில் தரையிறங்க இருக்கும் விக்ரம் விண்கலம் பிரியும் விக்ரம் விண்கலம்  நிலாவில் தரையிறங்கிய நான்கு மணி நேரத்தில் இருந்து நிலாவில் ஊர்ந்து சென்று ஆராயும். பிரக்யான் விண்கலம் நிலவில் இறங்கி ஆராயும் பணியை தொடங்கும். விக்ரம் விண்கலம்  14 நாட்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டு தகவல்களை இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பும்  சந்திரயான்-2 விண்கலம் ஓராண்டு காலம் நிலவைச் சுற்றி வந்து ஆய்வில் ஈடுபடும்.

இந்த ஆய்வின் மூலம் நிலவில் தண்ணீர் உள்ளதா வேறு என்னென்ன தனிமங்கள் உள்ளன நிலவின் தட்பவெப்பம் குறித்து அனைத்து தகவல்களும் ஆய்வு செய்யப்பட உள்ளன நிலாவில் விக்ரம், பிரக்யான் கலங்கள் திட்டமிட்டபடி தரையிறங்கினார்கள் என்றால்  அமெரிக்கா ரஷ்யா சீனா வுக்கு பின்னர் இதுபோன்ற ஆய்வில் ஈடுபட்டது நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா அடையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Chandrayaan-2 spacecraft will fly in the afternoon.


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->