நீங்கள் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துபவரா?... இதை படியுங்கள்!! - Seithipunal
Seithipunal


ஸ்மார்ட்ஃபோன் மூலம் நாம் பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்ஃபோனில் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கின்றதா என்பதை கவனிக்க வேண்டும். 

ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்திய பின் ஒவ்வொரு முறையும் அதை லாக் செய்ய வேண்டும். இதனால் உங்கள் தகவலை மற்றவர் அறிந்து கொள்ளாதபடி பாதுகாக்க முடியும். 

எந்த பயன்பாட்டையும் பதிவிறக்கம் செய்யும் முன் அதை பற்றிய முழு ஆய்வு கூறுகளையும் நன்கு படித்து பின் பதிவிறக்கம் செய்தல் நல்லது.

உங்கள் ஃபோனை அடிக்கடி அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

 வைஃபை பயன்படுத்துவது அதிக அளவு பாதுகாப்பு அளிப்பதில்லை. உங்களுக்கே தெரியாமல் உங்கள் மொபைலை அவர்கள் பயன்படுத்தி கொள்ளும் அபாயமும் உள்ளது.

கடவுச்சொல்லை பயன்படுத்தி தகவல்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.

ஆன்ட்ராய்டு டிவைஸ் மேனேஜரை செயல்படுத்துவதால் உங்கள் போன் தொலைந்து போனாலும் உங்களால் கண்டுபிடிக்க முடியும்.

கேலரி, மெசேஜிங் போன்றவற்றிற்கு கூடுதலான பாதுகாப்பு தேவை. இதனால் உங்கள் தனிப்பட்ட விஷயங்கள் வெளியே செல்லாமல் பார்த்து கொள்ள முடியும்.

பேக்கிரவுன்டு டேட்டா பயன்பாடுகளை குறைப்பதால் அதிக அளவு டேட்டாவை சேமிக்க முடியும். பேக்கிரவுன்டு டேட்டா பயன்பாட்டினை குறைக்க செட்டிங்ஸ், டேட்டா யூசேஜ், ரெஸ்ட்ரிக்ட் பேக்கிரவுன்டு டேட்டா என்பதை பயன்படுத்தலாம்.

உங்களது மொபைலில் கூகுள் ப்ளே ஸ்டோர் ஆட்டோ அப்டேட் மோடில் இருந்தால் டேட்டா தீர்ந்து போகும். இதற்கு ப்ளே ஸ்டோர் சென்று Auto update apps over Wi-Fi only என்பதை தேர்வு செய்யவும்.

இன்டர்நெட் மூலம் மியூசிக் தளங்களை பயன்படுத்தினால் உங்கள் டேட்டாக்கள் அதிகம் செலவாகும். முடிந்த வரை பாடல்களை Micro SD கார்டில் பதிவு செய்து அதில் இருந்து பாடல்களை கேட்பது நல்லது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Smartphone user problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->