ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள இந்த குறியீடு என்னவென்று தெரியுமா? - Seithipunal
Seithipunal


ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள இந்தக் குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம்?

ரேஷன் அட்டை நமக்கு ஒரு அடையாள அட்டையாக இருந்து வருகிறது. தற்போது ஸ்மார்ட் கார்டு என்ற பெயரில் ஒரு அட்டையை கொடுத்துள்ளனர். 

நாம் எல்லோரும் பயன்படுத்தும் ரேஷன் அட்டை ஒரே மாதிரியாக இருந்தாலும் அதில் பல வித்தியாசங்கள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்... என்னவென்றால் அரசாங்கம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் சில குறியீடுகளை வைத்துள்ளது. அதற்கான அர்த்தங்கள் பலருக்கும் தெரிவதில்லை. 

ரேஷன் அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த 5 வகையான குறியீடுகள் ரேஷன் அட்டைதாரர் எந்தெந்த பொருட்களை வாங்கலாம் என்பதையும், உங்களுடைய ரேஷன் அட்டையில் எந்த வகையான குறியீடு உள்ளது என்பதையும், அந்த அட்டைக்கு ரேஷன் கடைகளில் என்னென்ன பொருட்கள் வாங்கலாம்? என்பதை பற்றியும் இங்கு பார்க்கலாம்.

PHH (Priority Household) - முன்னுரிமை உள்ளவர்கள் :

உங்கள் ரேஷன் கார்டில் PHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கொடுக்கப்படும்.

PHH - AAY:

உங்கள் ரேஷன் கார்டில் PHH - AAY என்ற குறியீடு இருந்தால் 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம். இந்த வகையான ரேஷன் கார்டுகள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு தரப்படும். மேலும் இந்த வகையான அட்டைகள் விதவை, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு வழங்கப்படும். 

NPHH(Non priority household) - முன்னுரிமை இல்லாதவர்கள்:

உங்கள் ரேஷன் கார்டில் NPHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும். 

NPHH-S:

💳 உங்கள் ரேஷன் கார்டில் NPHH-S என குறிப்பிட்டு இருந்தால் ரேஷன் அட்டைதாரர் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கலாம். ஆனால், அரிசி மட்டும் கிடைக்காது. இந்த வகையான ரேஷன் அட்டையை சர்க்கரை அட்டை என்று சொல்வார்கள்.

NPHH-NC:

உங்கள் ரேஷன் கார்டில் NPHH-NC என குறிப்பிட்டு இருந்தால் ரேஷன் கடைகளில் எந்தவொரு பொருளும் கிடைக்காது. இந்த வகையான ரேஷன் அட்டையை ஒரு அடையாள ஆவணமாகவும், முகவரிக்கான சான்றாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

குறிப்பு :

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் அட்டைதாரரின் புகைப்படத்துக்கு கீழே இந்த குறியீடுகள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இதன் மூலம் உங்களுடைய ரேஷன் அட்டை எந்த வகையான ரேஷன் அட்டை என்பதையும், உங்கள் ரேஷன் அட்டைக்கு என்ன பொருட்கள் கிடைக்கும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Smart ration card Symbol


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->