சந்திரயான் -2 விண்ணில் ஏவப்பட்டது குறித்து., இஸ்ரோ தலைவர் சிவன் உருக்கமாக வெளியிட்ட தகவல்!! - Seithipunal
Seithipunal


கடந்த 15 ஆம் தேதி ஏவப்பட இருந்த சந்திரயான்-2 விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாரை சரி செய்ய விஞ்ஞானிகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டு இதையடுத்து, விண்கலத்தில் உள்ள கிரையோஜெனிக் எந்திரத்தின் ஹீலியம்  வால்வில் ஏற்பட்ட விரிசலால் கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அதனை அடைக்கும் பணி 7 நாட்களாக நடைபெற்றது இதையடுத்து இன்று மதியம் 2.43 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

இதையடுத்து, சந்திரயான்-2 விண்கலம் வெற்றகரமாக ஏவப்பட்டது குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், சோதனைகளை முறியடித்து சந்திரயான்-2 விண்ணில் பறந்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் - 2 கால் பதிக்கும், இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இது எனவும் கடந்த ஒன்றரை ஆண்டுகள் சிறிதும் ஓய்வின்றி சந்திரயான் 2-க்காக உழைத்தனர். அவர்கள் உழைப்பால் தான் இன்று இந்த சாதனை நடந்துள்ளது தெரிவித்தார்.

மேலும், வெற்றிக்கு உழைத்த அனைத்து தரப்பினருக்கும் எனது பாராட்டுக்கள் என தெரிவித்த அவர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் இன்று என தெரிவித்தார். அடுத்தடுத்து பல செயற்கைகோள்களை ஏவ திட்டமிட்டுள்ளோம், இதனால் இந்திய தேசியக்கொடி விண்வெளி அரங்கில் பட்டொளி வீசி பறக்கும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

இந்தநிலையில், சந்திரயான்-2 விண்கலம் வெற்றகரமாக ஏவப்பட்டதிற்கு பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் அங்கு பணியாற்றும் அனைவர்க்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivan says about Chandrayaan 2


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->