பப்ஜி விளையாட்டிற்கு தடை விதித்து உத்தரவு.! அதிர்ச்சியில் தமிழக ஸ்குவார்டுகள்.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் நடக்கவிருக்கும் மாசி திருவிழாவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த முறை அதில் ஒரு பகுதியாக பப்ஜி விளையாட்டுப் போட்டி நடைபெறும் என்று தனியார் செல்போன் கடை ஒன்று அறிவித்துள்ளது. மேலும் இந்த போட்டியில் வெற்றி போட்டியில் வெற்றி பெறுவதற்கு ரூபாய் மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரம் பரிசு தொகையை அறிவித்திருக்கிறது. 

தற்போது சிறுவர்கள், மாணவர்கள் என்று அனைவரது மத்தியிலும் பிரபலமாக இருக்கும் விளையாட்டு என்றால் அது பப்ஜி. இந்த விளையாட்டு வந்ததில் இருந்து சில இளைஞர்கள் இந்த விளையாட்டில் மூழ்கி அவர்களது வாழ்க்கையை தொலைக்கும் சோகமும் ஏற்பட்டுள்ளது.

Image result for pubg seithipunal

இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் பகுதியில் நடக்கவிருக்கும் மாசி திருவிழாவில் 'பப்ஜி சாம்பியன்ஷிப்' என்ற போட்டியை நடத்த தனியார் செல்போன் கடை ஒன்று முடிவு செய்து அதற்கான அறிவிப்பு வெளியிட்டது. இந்த விளையாட்டில் வெற்றி பெறுபவருக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாவது பரிசாக ஐம்பதாயிரம் ரூபாயும் மற்றும் மூன்றாவது பரிசாக ரூபாய் 20000 என அறிவித்தது.

பொதுவாக நடத்தப்படும் மாசித் திருவிழாவில் சிலம்பம், ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுகள் இடம் பெற்றிருக்கும். ஆனால் இம்முறை பப்ஜி விளையாட்டை அறிமுகப்படுத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியை தடை செய்ய வேண்டும் என்று ஒரு தரப்பில் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது இந்த பப்ஜி சாம்பியன்ஷிப் போட்டி தடைசெய்யப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivagangai pubg competition cancelled


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->