சாம்சங் ஸ்மார்ட்போனிற்கு செம டீல்.! மகிழ்ச்சியில் திளைக்கும் வாடிக்கையாளர்கள்.!! - Seithipunal
Seithipunal


பிரபல அலைபேசி நிறுவனமான சாம்சங் நிறுவனம் புளூ பெஸ்ட் சேல் என்ற சிறப்பு விற்பனையை தற்போது அறிவித்துள்ளது. சுமார் ஆறு நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையானது., நவம்பர் 19 ஆம் தேதியன்று நிறைவு பெறவுள்ளது. 

இந்த சிறப்பு விற்பனையின் கீழாக சாம்சங் அலைபேசிகள் மற்றும் பிற பொருட்களின் விலையானது குறைக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்சி எம் 10 எஸ் அலைபேசியின் விலையானது குறைந்துள்ளது.

கேலக்சி எம் 10 எஸ் ரக அலைபேசியின் விலையானது ரூ.1000 வரை குறைக்கப்பட்டு., தற்போது ரூ.7,999 ஆகவும்., சாம்சங் கேலக்சி நோட் 9 ரக அலைபேசி ரூ.42,999 ஆகவும்., கேலக்சி எஸ் 9 ரக மற்றொரு அலைபேசி ரூ.29,999 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

Samsung, Samsung images,
 
இதனைப்போன்று இணையம் மூலமாக மேற்கூறியுள்ள அலைபேசியை வாங்கும் எச்.டி.எப்.சி வாடிக்கையாளருக்கு சுமார் 10 விழுக்காடு அளவிற்கான சலுகையும்., சிறப்பு விலை சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. 

இதில் சிறப்பு விலை குறிப்பிடப்பட்டுள்ள சாம்சங் சார்ஜர்., கேலக்சி வாட்ச் அக்டிவ் மற்றும் ஸ்ட்ராப் காம்போக்கள்., ஏ.கே.ஜி வை 500 ஹெட்செட்., கேலக்சி ப்ரண்ட் கவர் மற்றும் கிளியர் வியூ கவர் போன்றவைகளுக்கு பொருந்துகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samsung smartphone prices low in india


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->