பப்ஜி கேம் விளையாடுவதால் ஏற்படும் உடல் பிரச்சனைகள்.! - Seithipunal
Seithipunal


சமீப காலமாக பப்ஜி கேமிற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிமையாக உள்ளனர். மேலும் இரவு, பகல் பாராமல் சாப்பிடாமல், தூங்காமல் இந்த கேம் விளையாடி வருகின்றனர்.இதனால் பெரும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது.

மேலும் பலர் விபரீத முடிவுகளை எடுப்பதால் இந்திய அரசு பாப்ஜி கேம் நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே விளையாட முடியும் என்ற வரையறையை கொண்டு வந்தனர். 

பப்ஜி கேம் விளையாடுவர்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக யார் அழைத்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது, நண்பர்கள் போன் செய்தாலும் அதை எடுக்காமல் இருப்பது போன்ற அலட்சிய நிலை இந்த விளையாட்டால் ஏற்பட்டுள்ளது.  

இதனால் உறவுகளிடையே பல சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கேம் விளையாடும் நபருக்கு படிப்பில் கவனக் குறைவு, மன உளைச்சல், மன அழுத்தம், கோபம், ஆக்ரோஷம், மற்றவர்கள் மேல் எரிச்சல் இப்படி நமக்கே தெரியாமல் ஏகப்பட்ட கெட்ட குணங்கள் நம்முள் இந்த விளையாட்டால் குடியேறி விடுகிறது. 

இந்த பப்ஜி கேம் உங்கள் தூக்கத்தை கெடுத்து விடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

English Summary

pubg game playing in physical problem


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal