இன்று விண்ணில் சீறிப் பாயப் போகும் பிஎஸ்எல்வி சி- 51 ராக்கெட்.!! - Seithipunal
Seithipunal


இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அமேசோனியா 1 உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் விண்ணில் செலுத்த உள்ளது. இஸ்ரோ பிஎஸ்எல்வி ராக்கெட் வரிசையில் இன்று 59 ஆவது ராக்கெட்டை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து 10:24 மணிக்கு விண்ணில் செலுத்த உள்ளது. 

இதற்கான கவுன்ட் டவுன் நேற்று காலை 8.54 மணிக்கு துவங்கியது. முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள 19 செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை தீவிரமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்காணித்து வருகிறது. 

கவுண்ட் டவுனை முடித்துக்கொண்டு திட்டமிட்ட நேரத்தில் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரோ முதன்முதலாக வணிக ரீதியில் பிஎஸ்எல்வி சி-51  ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்த உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PSLV C 51 Rocket


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->