தொலைபேசியில் ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு இனி இவ்வளவு பிரச்சனை இருக்கா?? அதிர்ச்சி தகவல்!! - Seithipunal
Seithipunal



தற்போதைய வாழ்க்கைமுறையில் தொழிநுட்பம் வளர்ச்சி அடைந்து அனைத்தினையும் செல்போனிலே செய்துவிடலாம் என்ற அளவிற்கு டெக்னலாஜி வளர்ந்துவிட்டது. ஆனால் இந்த தொழிநுட்பம் வளர்ச்சியால்  குற்றங்களும், தவறுகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தொலைபேசி சம்மந்தமான கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரிடத்திலும் செல்போன் அவர்களில் உடலின் ஒரு உறுப்பு போலவே அவர்களிடம் எப்போதும் ஒட்டிக்கொண்டுள்ளது.

அதேபோல் இணையத்தளம் வாயிலாக வீட்டில் இருந்தபடியே அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடிகிறது. உண்ண உணவு, உடுத்த உடை, மருத்துவம், வங்கி என அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே செய்யமுடிகிறது. இந்த இணையம் பலநேரங்களில் பயனுள்ளதாக இருந்தாலும் சிலநேரம் ஆபத்தாகவும் உள்ளது. அதில் ஒன்றுதான் ஆபாச படம் பார்ப்பது. 

இணையத்தில் ஆபாச படம் உள்ளதால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றது. இந்தநிலையில் தொலைபேசியில் ஆபாச படம் பார்க்கும்போது பல விளைவுகள் ஏற்படுகின்றன. தொலைபேசியில் ஆபாச படம் பார்க்கும்போது உங்களது தகவல்கள் உங்களுக்கே தெரியாமல் திருடப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக வங்கி சம்மந்தமான தகவல்கள் திருட்டு போக அதிகவாய்ப்புள்ளது.

அதேபோல் இலவசமாகத்தானே கிடைக்கிறது என்று நீங்கள் அணுகும் இணைத்தளங்கள் வழியாக உங்களுக்கே தெரியாமல் மால்வேர் என சொல்லப்படும் வைரஸ்களை உங்கள் தொலைபேசியில் பரப்பி உங்கள் தொலைபேசியை செயலிழக்க செய்ய நேரிடும்.

ஆபாச இணையதளங்கள் மூலம் உங்கள் தொலைபேசி அல்லது கணினியில் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் உங்கள் அந்தரங்கம் சார்ந்த விஷயங்கள் வெளியே கசிய நேரிடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

problems for hot videos in mobile


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->