முதல்முறையாக தமிழகத்தில்... ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி.! 10,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு.!  - Seithipunal
Seithipunal


ஓலா நிறுவனம் சார்பாக தற்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஐரோப்பாவில் இ-சார்ஜிங் நிலையங்கள் உருவாக ஓலா நிறுவனம் மிக முக்கியகாரணமாக இருக்கின்றது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் தன்னுடைய முதல் மின்சார ஸ்கூட்டர்களை வரும் வாரங்களில் ஓலா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. 

இதன் தொடக்கமாக, நவீன எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி வசதியை ஏற்படுத்துவதில் நிறுவனம் மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக 2400 கோடிகளை ஓலா நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இதன் மூலமாக 10,000 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 

BGauss B8 Price , Mileage, Images, Colours

சமீபத்திய தகவலின்படி முதல் கட்ட வேலைகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஓலா நிறுவன தலைமை அதிகாரி பபிஷ் அகர்வால் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இயக்குவது போன்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

புதுமையான சாப்ட்வேர்கள் மூலமாக பல்வேறு மேம்பட்ட அம்சங்களை இந்த ஸ்கூட்டர் உள்ளடக்கியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். 500 ஏக்கர் பரப்பளவில் தமிழகத்தில் வரவிருக்கும் இந்த நிறுவனத்தின் கம்பெனியில் இந்த எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்படும். 

இந்த எலக்ட்ரானிக் ஸ்கூட்டரில் மாற்றக்கூடிய பேட்டரிகள் பொருத்தப்படும் என்றும், பேட்டரி ரீசார்ஜ் குறித்த பல சிக்கல்களை இதன் மூலம் சமாளிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் சுமார் ஒரு லட்சம் வரை மதிப்பிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ola manufacturing electric stooter in Tn


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->