இன்ஸ்டாகிராமில் புதிய அதிரடி...! 'இன்ஸ்டா பிளஸ்' கட்டண சேவை அறிமுகம்...! - மாதம் எவ்வளவு தெரியுமா...? - Seithipunal
Seithipunal


உலகளவில் கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ள இன்ஸ்டாகிராம், தனது பயனர்களை கவரும் வகையில் புதிய கட்டண சந்தா சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. "இன்ஸ்டாகிராம் பிளஸ்" என்ற பெயரில் அறிமுகமானுள்ள இந்த பிரீமியம் திட்டம், கூடுதல் வசதிகள் மற்றும் தனித்துவமான அனுபவங்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்டா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் இன்ஸ்டாகிராம், ஆரம்பத்தில் புகைப்படங்களை பகிரும் செயலியாக அறிமுகமானது. பின்னர் காணொளி பகிர்வு வசதி, நேரலை ஒளிபரப்பு, கதைகள் மற்றும் ரீல்ஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இணைக்கப்பட்டதன் மூலம் உலகின் முன்னணி சமூக வலைத்தள செயலிகளில் ஒன்றாக வளர்ச்சி பெற்றது.

குறிப்பாக குறுந்தகடு காணொளிகளுக்கான ரீல்ஸ் வசதி அறிமுகமான பிறகு, இளைஞர்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்கள் மத்தியில் இன்ஸ்டாகிராமின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்தது. இந்தியாவில் மட்டும் சுமார் 45 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், பயனர்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்கும் நோக்கில் "இன்ஸ்டாகிராம் பிளஸ்" என்ற புதிய சந்தா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவையை பெற விரும்புவோர் மாதந்தோறும் ரூ.299 கட்டணமாக செலுத்த வேண்டும்.இந்த புதிய திட்டத்தின் மூலம், வழக்கமான பயனர்களுக்கு கிடைக்காத சில பிரத்யேக வசதிகள், தனிப்பயனாக்கும் விருப்பங்கள் மற்றும் சிறப்பு அம்சங்களை சந்தாதாரர்கள் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் அறிமுகமாகவுள்ள புதிய தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் புதுமையான வசதிகளை பொதுப் பயனர்களுக்கு முன்பாகவே சோதித்து பயன்படுத்தும் வாய்ப்பு இன்ஸ்டாகிராம் பிளஸ் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேநேரத்தில், இந்த சந்தா திட்டம் முழுமையாக விருப்பத்தின் அடிப்படையில் செயல்படக்கூடியது என்றும், இலவசமாக இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வரும் பயனர்களின் சேவையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது பயன்படுத்தி வரும் அனைத்து வசதிகளையும் வழக்கம்போல தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

புதிய அனுபவங்களையும், முன்னுரிமை தொழில்நுட்ப வசதிகளையும் விரும்பும் பயனர்களை இலக்காகக் கொண்டு இந்த பிரீமியம் சேவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சமூக வலைத்தள உலகில் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பயனர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும் முயற்சியாக இன்ஸ்டாகிராம் பிளஸ் திட்டம் பார்க்கப்படுவதுடன், இது வரவேற்பைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New action on Instagram Introduction Insta Plus paid service Do you know how much month


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->